×

பார்மலின் பூசிய மீன் விற்பனை?

 

ஆண்டிபட்டி, நவ. 6: தேனி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்தும் மதுரை மீன் மாக்கெட்டிலிருந்தும், கேரளப்பகுதியிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மீன் ஐந்து டிகிரி செல்சியஸின் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அது விரைவில் கெட்டுப்போகிறது. இதைத் தவிர்க்கவும், நீண்ட நாட்களுக்குக்கு கெடாமல் இருக்கவும் அதில் ஃபார்மலினைத் தடவி விற்பனை செய்கின்றனர்க.

ஃபார்மால்டிஹைடில் இருந்து பெறப்படும் பார்மலின் பிணவறையில் பிரேதங்களை கெட்டுப் போகாமல் வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இதனால் புதிதாகப் பிடித்த மீன்களைப் போலவே இருக்கும் இந்த மீன்களைச் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்புண் என பல பாதிப்புகள் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.எனவே மீன் கடைகளில் மீன் வளர்ச்சித் துறை அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

The post பார்மலின் பூசிய மீன் விற்பனை? appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Theni ,Thiruchendur ,Kanyakumari ,Madurai fish ,Kerala ,
× RELATED வத்தலக்குண்டு பகுதியில் ஆபத்தை...