×

பஞ். தலைவிக்கு கொலை மிரட்டல் துணைத்தலைவர் கைது

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையை சேர்ந்த சித்திரை சகாய ராஜாவின் மனைவி திருக்கல்யாணி (42). சாஸ்தாவிநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவி. இவருக்கும், துணைத் தலைவர் ராபின்சனுக்கும் தீர்வை வரி தொடர்பாக விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 1ம்தேதி கிராமசபை கூட்டம் நடந்து முடிந்த நிலையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துணைத்தலைவர் ராபின்சன், பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணியை அவதூறாகப் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தட்டார்மடம் போலீசார், ராபின்சனை கைது செய்தனர்.

The post பஞ். தலைவிக்கு கொலை மிரட்டல் துணைத்தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Panj ,Chatankulam ,Thirukalyani ,Chitrai Sakaya Raja ,Pothakalanvilai ,Thoothukudi ,Shastavinallur ,
× RELATED திருப்பணிசெட்டிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம்