×

முன்னாள் அமைச்சர் ஐசியூவில் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் (74). காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சி துவங்கினார். 2016 தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். பின்னர், பாஜவிலிருந்து விலகியதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு மருத்துவரிடம் நலம் விசாரித்தார்.

The post முன்னாள் அமைச்சர் ஐசியூவில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Former Minister ,Puducherry Kannan ,Congress ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...