×

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென சளி, இருமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், சில நாள் ஓய்வெடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டுவதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு தலை நிமிர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வராய் முன் நின்று நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உரிமைகள் மீட்பு பொதுக்கூட்டங்கள் முதல்வர் பாராட்டு