×

இலங்கையுடன் வங்கதேசம் இன்று மோதல்

புதுடெல்லி: உலக கோப்பையின் 38வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.வங்கதேசம் இதுவரை விளையாடி உள்ள 7 லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கி இருப்பதுடன், அரையிறுதி வாய்ப்பையும் இழந்துவிட்டது. எஞ்சிய 2 போட்டியில் வென்றால் கூட, அந்த அணியால் அதிகபட்சம் 6 புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.இலங்கை அணிக்கும் ஏறக்குறைய அதே நிலைதான். அந்த அணி 7 போட்டியில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. கடைசி 2 போட்டியில் வென்று 8 புள்ளிகளை எட்டினாலும், அரையிறுதிக்கு முன்னேறுவது மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் மொத்த ரன்ரேட் என்று இடியாப்ப சிக்கலாகவே இருக்கும்.

இரு அணிகளுக்கும் இது சம்பிரதாயமான மோதலாக இருந்தாலும்…கவுரவமாக வெளியேற வெற்றி அவசியம் என்பதால் டெல்லி அருண் ஜெட்லி களத்தில் அனல் பறப்பது உறுதி. வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஷான்டோ, ஹசன் மகமூத், லிட்டன் தாஸ், மஹெதி ஹசன், மகமதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரகிம், முஸ்டாபிசுர் ரகுமான், நசும் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸித் அகமது, டன்ஸி, ஹசன் சாகிப், டஸ்கின் அகமது, தவ்ஹித் ஹ்ரிதய்.இலங்கை: குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா, துஷ்மந்த சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷான் ஹேமந்தா, திமத் கருணரத்னே, சமிகா கருணரத்னே, தில்ஷன் மதுஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், பதும் நிசங்கா, குசால் பெரேரா, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரம, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே.

The post இலங்கையுடன் வங்கதேசம் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Sri Lanka ,New Delhi ,World Cup ,Dinakaran ,
× RELATED இலங்கை, மொரீஷியசில் யுபிஐ சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்