×

அமெரிக்க படைக்கு பயந்து இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாசின் நம்பிக்கையை தகர்த்தது ஹிஸ்புல்லா: பதுங்கு குழியில் இருந்து உரையாற்றிய தலைவன்

பெய்ரூட்: அமெரிக்க படைக்கு பயந்து இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாசின் நம்பிக்கையை ஹிஸ்புல்லா தகர்த்தது. பதுங்கு குழியில் இருந்து காணொலி மூலம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவன் ஆற்றிய உரையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான தொடர்ந்து போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், லெபனான் நாட்டின் தலைநகரில் திரளான மக்கள் கூடியிருந்த இடத்தில், பதுங்கு குழியில் இருந்து காணொலி மூலம் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா ஆற்றிய உரையில், ‘பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அடைய முடியாத இலக்கினை அடைய இஸ்ரேல் கடந்த ஒரு மாத காலமாக முயற்சித்து வருகிறது. காசாவில் அடைய முடியாத இலக்கை இஸ்ரேல் விரட்டுகிறது. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இஸ்ரேல் பிணைக் கைதிகளை திரும்ப பெற முடியும்’ என்றார்.

இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றிவளைத்து, ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை அழித்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் போரை அறிவிக்காதது ஹமாசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் இஸ்ரேலுக்கு எதிராக பெரிய போரை ஹிஸ்புல்லா அறிவிக்கவிருந்தது. அதை தான் பாலஸ்தீனிய மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவ்வாறான அறிவிப்பை ஹிஸ்புல்லா செய்யவில்லை. ஹிஸ்புல்லா தலைவர், இஸ்ரேலுக்கு எதிராக ஏன் போரை அறிவிக்கவில்லை? அவர் ஹமாசை காட்டிக் கொடுத்தாரா? போர் திட்டத்தை அவர் கிடப்பில் போட்டது ஏன்? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு காரணம், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக அமெரிக்கப் படைகள் களத்தில் இறங்க திட்டமிட்டு இருந்ததால், திடீரென ஹிஸ்புல்லா பின்வாங்கியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘இஸ்ரேலுக்கு எதிரான போரை ஹிஸ்புல்லா தலைவர் ஆதரித்தாலும், அவர் இஸ்ரேலுக்கு எதிரான போரை அறிவிக்கவில்லை. ஹிஸ்புல்லா தலைவரின் பேச்சு ஹமாஸ் அமைப்பின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. அமெரிக்காவிற்கு பயந்து தான் ஹிஸ்புல்லா போரை அறிவிக்கவில்லை. லெபனான் அருகே அமெரிக்க கடற்படை பயிற்சிகளை மேற்கொள்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ராஜதந்திர நடவடிக்கையால் போரில் இருந்து ஹிஸ்புல்லா தலைவர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்றனர்.

The post அமெரிக்க படைக்கு பயந்து இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாசின் நம்பிக்கையை தகர்த்தது ஹிஸ்புல்லா: பதுங்கு குழியில் இருந்து உரையாற்றிய தலைவன் appeared first on Dinakaran.

Tags : US ,Hamas' ,Israel ,BEIRUT ,Hamas ,Hezbollah ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி