×

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

காத்மண்டு: நேபாளத்தில் நேற்று ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்தது. தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலநடுக்கமானது டெல்லி-என்சிஆர், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய வடமாநில பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.38 மணியளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

The post நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...