×

பாகிஸ்தானில் மோட்டார் வாகன ஓட்டிகள் பலரும் முறையாக பயிற்சி பெறுவதோ, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோ இல்லை: ஆர்த்தோபீடிக் கூட்டமைப்பு கருத்தரங்கில் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அந்நாட்டின் ஆர்த்தோபீடிக் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில், மோட்டார் வாகன விபத்துகளில் சிக்கி தினமுன் 500 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள்.

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு அதிக செலவிலான சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. சிலர் உடலுறுப்புகளை இழக்கவும் நேரிடுகிறது. இதனால், இளைஞர்களின் வாழ்க்கையே மாறி விடுகிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அறுவை சிகிச்சை நிபுணர் கூறும்போது; பகிஸ்தானில் 500 பேர் வரை ஒவ்வொரு நாளும் சாலை போக்குவரத்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதில், காயமடைபவர்களை நோய் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் என கருத்தில் கொள்வதில்லை. அதனால், பாகிஸ்தானில் சாலை விபத்துகளில் மக்கள் காயம் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்றினால் இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எதிர்கால பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். கோடிக்கணக்கான மதிப்பிலான பணமும் மிச்சப்படும் என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது அவசியம். மோட்டார் வாகன ஓட்டிகள் பலரும் பயிற்சியை முறையாக பெறுவதோ, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தானில் மோட்டார் வாகன ஓட்டிகள் பலரும் முறையாக பயிற்சி பெறுவதோ, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோ இல்லை: ஆர்த்தோபீடிக் கூட்டமைப்பு கருத்தரங்கில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Orthopaedic Federation Seminar ,Islamabad ,Orthopaedic Federation ,Orthopedic Federation Seminar ,Dinakaran ,
× RELATED அதிகார பகிர்வில் முரண்பாடு...