×

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.24 லட்சம் கடனுதவி வழங்கல்

தேனி, நவ. 5: தேனி அருகே காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நேரடி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கூட்டுறவு சார்பதிவாளர் முத்தையா கலந்து கொண்டு 24 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை கடனாக வழங்கினார்.

அப்போது, அவர் கூறும்போது, இந்நிதியாண்டில் கடந்த ஜூலை 31ம் தேதி 68 பேருக்கு ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 24 பேருக்கு ரூ.24 லட்சம் கடன் வழங்கப்பட்டதையடுத்து, இந்தாண்டு ரூ.84 லட்சம் நேரடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் ராமர் மற்றும் சங்க பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.24 லட்சம் கடனுதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Kamachipuram Primary Agricultural Cooperative Credit Union ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு