×

தென் மண்டல அளவில் திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் கூட்டம்: மதுரையில் நடந்தது

 

மதுரை, நவ.5: மதுரையில் நடைபெற்ற தென் மண்டல திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார். திமுக நெசவாளர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகர், வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி மாநகர், தெற்கு, வடக்கு, தென்காசி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி மாநகர், கிழக்கு, மத்தியம் கன்னியாகுமரி மேற்கு, கிழக்கு, நாகர்கோவில் மாநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெசவாளர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநில நெசவாளர் அணி செயலாளர் க.பழனிசாமி வரவேற்றார். கூட்டத்திற்கு, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் நாகலிங்கம், சச்சிதானந்தம், காஞ்சி அன்பழகன், பரணிமணி, நாகராஜன், சந்து ரவிச்சந்திரன், ஜி.வி.மணிமாறன், ராமசாமி, கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ பங்கேற்றார். இக்கூட்டத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவை குறித்து பேசினார். மதுரை மாநகர் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வெள்ளைத்துரை நன்றி கூறினார். இதில் மதுரை வடக்கு மாவட்ட ெநசவாளர் அணி அமைப்பாளர் வினோத், தெற்கு மாவட்ட அமைப்பாளர் உலகநாதபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post தென் மண்டல அளவில் திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் கூட்டம்: மதுரையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : DMK weavers ,South Zone ,Madurai ,DMK ,Weaver ,Executives Meeting ,South Zone DMK ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...