×

சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு

 

ஈரோடு,நவ.5: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள்(30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,800 மூட்டையும், உருண்டை வெல்லம் 4,100 மூட்டையும்,அச்சு வெல்லம் 650 மூட்டையும் வரத்தானது.

இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,270 முதல் ரூ.1,670 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,260 முதல் ரூ.1,330 வரை என்ற விலையில் விற்பனையானது. இந்த வாரம் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த வாரம் விற்பனையான விலையிலேயே வெல்ல மூட்டைகள் விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chithod Market ,Erode ,Chithod Vela Market ,Dinakaran ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்