×

பட்டா மாறுதல் முறைகேடு கிராம உதவியாளர் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை

 

திருவள்ளூர், நவ. 5: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் ஏனம்பாக்கம் ஊராட்சியில் கிராம உதவியாளராக, முனிவேல் பணிபுரிந்து வந்தார். கடந்த, 2018ம் ஆண்டு அவர் பணிபுரிந்த போது, கிராமவாசிகள் சிலரின் சொத்துக்களை, அவர் பெயரில் பட்டா மாற்றம் செய்து, பின், தனது உறவினர்கள் பெயரில் மாற்றியதாக, கிராமவாசிகள், கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தனர். மேலும், பட்டா வழங்கியதில் முறைகேடு உள்ளதாகவும், கிராமவாசிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில், முனிவேல், சீயஞ்சேரி கிராம உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஏனம்பாக்கம் ஊராட்சி தலைவர் பாபு மற்றும் உறுப்பினர்கள், கிராமவாசிகள் அளித்த மனு மீது, விசாரணை நடத்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மாலதி நியமனம் செய்யப்பட்டார். அவர் விசாரணை நடத்தி, அரசு நில ஆவணங்களை திருத்தம் செய்து, முறைகேடாக எவ்வித ஆவணம் இல்லாத நிலையில், பட்டா மாறுதல் செய்தது தெரிய வந்ததாக, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதன் பேரில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், சீயஞ்சேரி கிராம நிர்வாக உதவியாளர் முனிவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

The post பட்டா மாறுதல் முறைகேடு கிராம உதவியாளர் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Munivel ,Enambakkam panchayat ,Oothukottai circle ,Tiruvallur district.… ,Dinakaran ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...