×

தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு தூக்கி வீசப்பட்ட மரங்கள் மறுநடவு: பசுமை ஆர்வலர்கள் வரவேற்பு

 

வாலாஜாபாத், நவ.5: வாலாஜாபாத் அருகே தூக்கி வீசப்பட்ட அரசமரம், ஆலமரம் தன்னார்வ அமைப்பு சார்பில் மறுநடவு செய்யப்பட்டது. இது பசுமை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் விதைகள் தன்னார்வு அமைப்பு சார்பில், கைவிடப்பட்ட அரசமரம் மற்றும் ஆலமரம் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று வாலாஜாபாத் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக வாலாஜாபாத் அருகே விவசாய நிலப் பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அரசமரம் மற்றும் ஆலமரத்தை அகற்றி வைத்திருந்தனர். இதனை அரிமா சங்க நிர்வாகி வெங்கடேசன், விதைகள் அமைப்பைச் சேர்ன்த சரண் ஆகியோர் மீண்டும் பழமைவாய்ந்த இந்த மரங்களை எங்காவது நடவு செய்து, உயிரோட்டம் தர வேண்டும் என முடிவு செய்தனர்.

இதனையடுத்து வாலாஜாபாத் ரயில் நிலையம் அருகாமையில் மரங்களை நடவு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டது. பின்னர் ராட்சத இயந்திரம் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு மரங்கள் மறுநடவு செய்யப்பட்டன. இதனை பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர் பார்வையிட்டார். அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், இஸ்மாயில், தனசேகர், திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன், அரிமா சங்க நிர்வாகி சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினர் மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பினர் மரங்களை நட்டவுடன் அதற்கான நீரூற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.  மேலும் இந்த மரம் வளர்ந்து நிழல் தரும் வரை இதனை கண்காணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 80 ஆண்டுகளுக்கும் பழமையான அரசமரம், ஆலமரம் உயிரோட்டம் செய்யப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மட்டுமின்றி பசுமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு தூக்கி வீசப்பட்ட மரங்கள் மறுநடவு: பசுமை ஆர்வலர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Walajabad ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...