×

அரசு விடுதியில் ஆணைய இயக்குநர் திடீர் ஆய்வு

 

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.5: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு விடுதியில் அடிப்படை வசதி கோரி நேற்று முன்தினம் மாணவிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மாநில இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில், அரசு ஆதி திராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தங்கியிருந்து, மூக்காரெட்டிப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாணவிகள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆதி திராவிடர் நல தனி தாசில்தார்(பொ) சின்னா சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மாநில இயக்குநர் ரவிவர்மன் நேற்று விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், டிஎஸ்பி ஜெகநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், லதா, தாசில்தார் வள்ளி, ஆர்ஐ வெங்கடாஜலம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அரசு விடுதியில் ஆணைய இயக்குநர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Commission ,Pappirettipatti ,
× RELATED பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்!