×

கிக் பாக்ஸிங் கில் பதக்கங்கள் குவிப்பு; சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வீராங்கனை: தமிழக அரசு நிதியுதவி கிடைக்குமா?


திருவொற்றியூர்:: சென்னை மணலி எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களது மகள் அபர்ணா. இவர் மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்ப ஏழ்மை காரணமாக படிப்பு செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுள்ளது. இவர், சிறு வயது முதலே கிக் பாக்சிங்கில் பயிற்சி பெற்று தாய்லாந்து, நேபாள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளார். மேலும் மத்திய பிரதேசம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று கிக் பாக்ஸிங் கில் முதலிடம் பிடித்து 8க்கும் மேற்பட்ட தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தநிலையில், கம்போடியாவில் ஒலிம்பிக் பெடரேசன் சார்பில், உலக அளவில் கிக் பாக்சிங் போட்டி வருகின்ற 26ம் முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் மாணவி அபர்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சமூகநல ஆர்வலர்கள் உதவி செய்துள்ளனர். தற்போது கம்போடியாவுக்கு சென்று வர ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் இவருக்கு செய்ய முன்வராததால் கம்போடியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.

‘’உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று நிச்சயம் முதல் பரிசை வெல்வேன்’’ என்று உறுதியாக உள்ள அபர்ணாவுக்கு தமிழக அரசு, சமூகநல ஆர்வலர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று அபர்ணாவின் தாய் தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post கிக் பாக்ஸிங் கில் பதக்கங்கள் குவிப்பு; சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வீராங்கனை: தமிழக அரசு நிதியுதவி கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Thiruvottiyur ,Gopalakrishnan ,Chennai Manali MMDA ,Devi ,Tamil Nadu government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...