×
Saravana Stores

“காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி உரம் தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை”: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவிரி படுகை மாவட்டங்களில் காம்ப்ளக்ஸ் எனப்படும் கூட்டு உரங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. டி.ஏ.பி.க்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். டி.ஏ.பி. உரத்தின் சத்துகள் பயிர்களுக்கு உடனே கிடைக்கும், காம்ப்ளக்ஸ் உரச் சத்துகள் கிடைக்க நீண்டகாலம் ஆகும் என்று ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

The post “காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி உரம் தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை”: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DAP ,Cauvery ,Ramadoss ,Chennai ,Pamaga ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை