×

‘இனிமேல் இதுதான் ஸ்பீடு’ சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம். இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும், இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும்.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் வேகவரம்பை மீறி செல்லும், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 1,000 அபராதம் கனரக வாகனங்களுக்கு 2000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

The post ‘இனிமேல் இதுதான் ஸ்பீடு’ சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...