×

மாநில தடகள போட்டி திண்டுக்கல் பள்ளி மாணவர் சாதனை

திண்டுக்கல், நவ. 4: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் 17 வயதிற்குட்பட்ட குடியரசு தின விழா மாநில அளவிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த அக்.28ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அணி சார்பில் எஸ்.எம்.பி.எம் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜித்தன் அர்ஜுன் நீளம் தாண்டுதல் போட்டியில் 7.38 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இம்மாணவர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சாதனை படைத்த மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் மாணவரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத் கனி, உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பாண்டியராஜன் உள்பட பலர் பாராட்டி வாழ்த்தினர்.

The post மாநில தடகள போட்டி திண்டுக்கல் பள்ளி மாணவர் சாதனை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,State Athletics ,Tamil Nadu Government School Education Department ,Republic Day ,State Athletic Competition ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை