×

₹1 லட்சம் திருடுபோனதாக நாடகமாடிய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர், நவ. 4: விழுப்புரம் பாப்பான்குளம் செஞ்சி ரோட்டில் வசித்து வருபவர் வேலுச்சாமி மகன் பழனிச்சாமி (41). இவர் தின வட்டிக்கு தண்டல் கொடுத்து வட்டி வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ஈஸ்வரன் (26), திண்டுக்கல் இந்திரா நகரைச் சேர்ந்த அழகர் மகன் அருண்குமார் (27) தண்டல் வட்டி வசூல் செய்யும் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் தற்காலிகமாக முண்டியம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இருவரும் பொய்கை அரசூர் சுற்றியுள்ள கிராமங்களில் வட்டி வசூல் செய்துவிட்டு இருவேல்பட்டு ஏரி அருகில் வந்தபோது தங்களிடமிருந்த ரூ.1 லட்சம் வசூல் பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்து கொண்டதாகவும், எங்களை தாக்கி பைக்கை பறித்துக்கொண்டதாக கூறினர். இதுகுறித்து வேலுச்சாமி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையில் 2 ேபரும் வட்டி வசூல் பணத்தை ேமாசடி செய்வதற்காக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஈஸ்வரன், அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post ₹1 லட்சம் திருடுபோனதாக நாடகமாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Palanichamy ,Senchi Road, Villupuram Papankulam ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம்