×

டேன்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு

 

பந்தலூர், நவ.4: தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகம் டேன்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி டேன்டீ அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இண்டகிரல் பிளான்டேசன் ஒர்க்கஸ் யூனியன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜெபமாலை தமிழ்நாடு முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிள்ளதாவது, ‘‘பொதுத்துறை நிறுவனங்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு அரசு வெளியிட்டதை அறிந்தோம்.

போக்குவரத்து மற்றும் மின்வாரியம் போன்ற நிறுவனங்கள் பெறும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அவர்களுக்கெல்லாம் 20 சதவீத போனஸ் அறிவித்து, தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகம் டேன்டீ தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் என்று அறிவிக்கப்பட்டதை அறிந்த டேன்டீ தொழிலாளர்கள் மிகவும் மன வேதனையில் உள்ளனர். அதனால் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்பது எனவும் வருகின்ற 8ம் தேதி குன்னூரில் உள்ள டேன்டீ தலைமை அலுவலகம் முன்பு ஒருநாள் அடையள உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

The post டேன்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Tamil Nadu Government Tea Estate Corporation ,Diwali ,Tandy ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்