×

2.91 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

 

நாமக்கல், நவ.4: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, வரும் 6ம் தேதி துவங்கி 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளில், 7,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,91,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் தலைமையில், துறை அதிகாரிகளை கொண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படும். அந்தந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் எடுத்துரைக்கப் படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால், குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று, கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இதுகுறித்து கலெக்டர் உமா கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம், முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.இந்த தடுப்பூசி பணிக்காக, மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை, முகாமிற்கு அழைத்துச்சென்று, வரும் 6ம் தேதி முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளவேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post 2.91 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...