×

சாலையில் பள்ளம் தோண்டிய நபர் மீது போலீசில் புகார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 6வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில், தனிநபர் ஒருவர் அனுமதியின்றி புதிய குடிநீர் இணைப்புக்காக, சாலையில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தார். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தபோது, அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதை துண்டித்தனர். பின்னர் சாலையில் அனுமதியின்றி பள்ளம் தோண்டியதாக அம்பேத்கர் நகரை சேர்ந்த மனோஜ் சுப்பிரமணி மீது, சாத்தாங்காடு காவல் நிறையத்தில் புகார் அளித்தனர்.

The post சாலையில் பள்ளம் தோண்டிய நபர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Tiruvotiyur ,Ambedkar Nagar, Tiruvotiyur Mandal ,6th Ward ,
× RELATED ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு...