×

இங்கிலாந்து – ஆஸி. இன்று மோதல்

உலக கோப்பையில் இன்று நடக்கும் 2வது ஆட்டத்தில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதுகின்றன. அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இதுவரை விளையாடிய 6 லீக் ஆட்டங்களில் 5ல் தோற்று கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. எஞ்சிய 3 போட்டியிலும் வென்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கானல் நீர்தான் என்ற நிலையில், இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆறுதல் வெற்றிக்காகவும், கவுரவம் காக்கவும் அந்த அணி போராடும் என எதிர்பார்க்கலாம்.

அதே சமயம், 6 போட்டியில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதும், அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்க முடியாததும் ஆஸி.க்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும், புதிய எழுச்சியுடன் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள 5 முறை சாம்பியன் ஆஸி.யை சமாளிப்பது, நடப்பு சாம்பியனுக்கு சவாலாகவே இருக்கும்.

* இரு அணிகளும் 155 முறை மோதியுள்ளதில் ஆஸி. 87-63 என முன்னிலை வகிக்கிறது (3 ஆட்டம் ரத்து, 2 ‘டை’).

* பொதுவான களத்தில் மோதிய 8 ஆட்டங்களில் ஆஸி. 8-2 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் ஆஸி. அணியே 4-1 என முந்தி இருக்கிறது.

* அகமதாபாத்தில் இதுவரை 29 ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணி 14 முறையம், சேஸ் செய்த அணி 15 முறையும் வென்றுள்ளன.

* இங்கிலாந்து: பட்லர் (கேப்டன்), பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மலான், ரூட், மொயீன், கேர்ஸ், சாம் கரன், லிவிங்ஸ்டன், ஸ்டோக்ஸ், வில்லி, வோக்ஸ், அட்கின்சன், அடில் ரஷீத், மார்க் வுட்.

* ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்), வார்னர், லாபுஷேன், ஸ்மித், கிரீன், ஸ்டாய்னிஸ், அபாட், கேரி, இங்லிஸ், ஹெட், ஹேசல்வுட், ஸம்பா, ஸ்டார்க்.

The post இங்கிலாந்து – ஆஸி. இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : England ,World Cup ,Australia ,Ahmedabad Modi Stadium ,Aussies ,Dinakaran ,
× RELATED ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? : கம்பீர் பதில்