×

எல்லாபுரம், பூண்டி ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில், ஆத்துப்பாக்கம் கிராமத்திலும், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், போந்தவாக்கம் கிராமத்திலும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, ஆ.சத்தியவேலு, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பு துணைத்தலைவர், தொகுதி பொறுப்பாளருமான அரசகுமார் கலந்துகொண்டு, பாக முகவர்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எல்லாபுரம், பூண்டி ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ellapuram ,Poondi Union ,DMK ,MLA ,Oothukottai ,Thiruvallur East District ,North and South ,Union ,Oothukottai district ,Athupakkam ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரும், தலைமை...