×

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குட்டி யானை உயிரிழப்பு

பரலியார்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரலியார் குடியிருப்பில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் ஒரு பெண் யானை குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் அந்த குட்டியால் எழும்ப இயலவில்லை. அதைக் கண்ட பரளியார் மக்கள் குன்னூர் சரகருக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக வனப்பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தார்கள். அப்பொழுது அந்த குட்டி எழும்ப இயலாமல் படுத்திருந்தது. நல்ல மழை என்பதாலும், அதே நேரத்தில் தாய் யானை அருகில் இருந்ததாலும், மேலும் மற்றொரு பெண் யானை மற்றொரு ஆண் யானையும் அதில் இருந்து 10 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்ததாலும் பணியாளர்கள் அருகில் செல்ல இயலவில்லை.

நேற்று காலை வன கால்நடை மருத்துவர் முதுமலை, டாக்டர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பைனாகுலர் மூலமாக அந்த குட்டி யானையை கண்காணித்தார். நேற்று காலை 10 மணியிலிருந்து குட்டி யானையின் உடல் பாகம் எதுவும் அசையவில்லை. ஆனால் மூன்று யானைகள் அங்கு இருந்ததால் யாரும் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. இன்று காலை மூன்று யானைகளும் குட்டியை விட்டு சென்றது. பின்னர் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் அருகே சென்று பார்த்த பொழுது குட்டி யானை (பெண்) இறந்ததை உறுதி செய்தார்கள். பின்னர் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிறவி முரண்பாடுகள் காரணமாக பிறந்த குட்டி இறந்ததாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

The post நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiri district ,Coonoor, Nilgiri district ,Paraliar ,Coonoor, Nilgiris district ,Dinakaran ,
× RELATED அதிக மழைப்பொழிவு இருக்கும் போது...