×

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கடைசி வாய்ப்பு: நாடு முழுவதும் 19 ஆர்.பி.ஐ. அலுவலகங்களில் மாற்றும் வசதி

டெல்லி: பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள அளிக்கப்பட்டு இருக்கும் கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள ஏராளமான மக்கள் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் திரண்டது. அக்டோபர் 8 முதல் தனிநபர்கள் சென்னை, பெங்களூரு, ஹதராபாத், போபால், புவனேஸ்வர், சண்டிகர், ஹவ்ஹாத்தி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கியின் பிராந்தி அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கலாம் RBI அறிவித்திருந்தது.

பிராந்திய அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் காப்பீடு செய்யப்பட்ட தபால் மூலமாக அனுப்பி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்று அறிவித்த RBI, அதற்கான படிவத்தையும் வெளியிட்டிருந்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளுடன் மக்கள் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களுக்கு படையெடுத்து இருக்கிறார்கள்.

சண்டிகரில் ஏராளமானவர்கள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள வரிசையில் காத்திருந்தனர். அக்டோபர் 31ம் தேதி வரை 97 விழுகாட்டிற்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாகவும், ரூ.10,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் RBI அண்மையில் தெரிவித்திருந்தது. இந்த நோட்டுகளை மாற்றி கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி தற்போது கடைசி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

The post பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கடைசி வாய்ப்பு: நாடு முழுவதும் 19 ஆர்.பி.ஐ. அலுவலகங்களில் மாற்றும் வசதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,RBI ,Dinakaran ,
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன்...