×

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது நடைபெற்று சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், அவர்களை தாக்கி அவர்களின் உடமைகளை பறித்ததுடன் அவர்களை நிர்வாணபடுத்தி சிறுநீர் கழித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தி வருகிறது.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற பெரிதும் காரணம் மதுவின் தாக்கம். தமிழகத்தில் குடியின் காரணமாக பல்வேறு இடங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றச் செயல்கள் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்துகொண்டே போகிறது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்டு, அவர்கள் மீது அநாகரிக செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராதவாறு உறுதிப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் நடைபெற போதை ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஏதாவது அடிப்படை நோக்கம் இருக்கிறதா என்று கண்டறிந்து குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.

தமிழகம் பல்வேறு ஜாதி, மதங்களை உள்ளடக்கிய மாநிலம், இதில் அனைவரும் இணங்கமான முறையில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் அதிகமான தவறுகள் நடைபெறு மூலகாரணமே மதுக்கடைகள் தான், அவற்றை தமிழக அரசு படிப்படியாக மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,GK Vasan ,CHENNAI ,Tamil State Congress ,Community ,Tirunelveli district ,
× RELATED காவிரி நீர் விவகாரம்: உடனடியாக...