×

டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது : கவிஞர் வைரமுத்து

சென்னை : டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க அரசு முடிவெடுத்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கும் , ஆளுநர் ரவிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை, அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்

இந்நிலையில், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில்,

“டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது

இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்

பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது

கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய்சிவக்கப் போகிறது?,”எனத் தெரிவித்துள்ளார்.

The post டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது : கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Tags : Sankaraiya ,Poet ,Vairamuthu ,Chennai ,Poet Vairamuthu ,Shankaraiya ,
× RELATED “இசையையும், பாடலையும்...