×

போர் தொடங்கியதில் இருந்து பலி எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது: ஹமாஸ் அறிவிப்பு

ராபா: ஹமாஸ் ஆளும் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் மூண்டது. போர் நடந்த 3 வாரங்களில் 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல் குவாத்ரா கூறுகையில்,‘‘காசாவில் 18 வயதுக்கு உட்பட்ட 3760 பேர் உட்பட மொத்தம் 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஊடுருவியபோது ஏராளமானோர் கொல்லப்பட்டனர்” என்றார்.  முதல் முறையாக நேற்று முன்தினம் ரபா எல்லை திறக்கப்பட்டு வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் இருந்த 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல் தரைவழிப்படைகள் நேற்று காசாவை நோக்கி மேலும் முன்னேறின. இஸ்ரேலில் இருந்து தனது தூதரை ஜோர்டான் திரும்ப பெற்றுள்ளது.

The post போர் தொடங்கியதில் இருந்து பலி எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது: ஹமாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Raba ,Ministry of Health ,Palestinians ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்