×

டபிள்யூடிஏ பைனல்ஸ் காஃபை வென்ற இகா

காங்கூன்: மெக்சிகோவின் காங்கூன் நகரில் உலகின் முன்னணி வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனஸ் டென்னிஸ் போட்டி நடக்கிறது.  அங்கு நேற்று செடுமல் ஒற்றையர் பிரிவில் உள்ள போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்(22வயது, 2வது ரேங்க்), அமெரிக்க ஒன்றிய வீராங்கனை கோகோ காஃப்(19வயது, 3வது ரேங்க்) ஆகியோர் மோதினர். இகா முதல் செட்டை 6-0, 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 29நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் 2-0 என நேர் செட்களில் வென்ற இகா அரையிறுதியை உறுதி செய்துள்ளார்.

அதே போல் மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர்(29வயது, 7வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வொண்டருசோவா(24வயது, 6வது ரேங்க்) ஆகியோர் களமாடினர். முதல் ஆட்டத்தில் தோற்ற இருவரும் 2வது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடினர். அதில் முந்திய ஆன்ஸ் 6-4, 6-3 என நேர் செட்களில் முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்த ஆட்டமும் ஒரு மணி 29நிமிடங்களில் முடிந்தது. இரட்டையர்களுக்கான மஹாஹுவல் பிரிவில் நேற்று அமெரிக்க ஒன்றிய வீராங்கனைகள் கோரி காஃப், ஜெசிகா பெகுலா இணை(முதல் ரேங்க்), 1-2 என்ற செட்களில் செக் குடியரசு வீராங்கனைகள் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா சினியகோவா(4வது ரேங்க்) இணையிடம் தோற்றது.

* பாலஸ்தீனத்துக்கு பரிசுத் தொகை கலங்கிய ஆன்ஸ்
ஆட்டத்துக்கு பிறகு கண்ணீர் பெருக பேசிய ஆன்ஸ், ‘இந்த வெற்றி மகிழ்ச்சி தந்தாலும் சமீபகாலமாக நான் மகிழ்ச்சியாக இல்லை. உங்களிடம் நேர்மையாக சொல்கிறேன். இன்று உலகில் நிலவும் சூழல் என்னை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. காசாவில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் இறப்பதை பார்க்கும் ேபாது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனர்களுக்கு சிறு உதவியாக தர உள்ளேன்.

மன்னிக்க வேண்டும் நண்பர்களே இங்கு டென்னிஸ் பற்றிதான் பேச வேண்டும். ஆனால் தினம் தினம் போர் வீடியோக்களை பார்ப்பது வெறுப்பாக உள்ளது. மீண்டும் மன்னிக்கவும். இது அரசியல் செய்தி அல்ல. இது மனிதநேயம் மட்டுமே. எனக்கு இந்த உலகில் அமைதி வேண்டும் என்பதால் இங்கு பேசினேன்’ என்றார். இதற்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போதும், டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா தான் பெற்ற பரிசுத் தொகையை தனது நாடான உக்ரைனுக்கு வழங்கினார்.

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் காஃபை வென்ற இகா appeared first on Dinakaran.

Tags : Iga ,WDA Finals Coffee ,Cancun ,WDA Binus Tennis match ,Congoon, Mexico ,WTA Finals Coffee ,Dinakaran ,
× RELATED இகா ஸ்வியாடெக் தொடர்ந்து நம்பர் 1: மகளிர் ஒற்றையர் தரவரிசை