×

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட கூடிய 3 ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரத்திலிருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை பரங்கிமலை-கடற்கரை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட கூடிய 3 ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. சென்னை எழும்பூர்-மன்னார்குடி(16179)ரயில், சென்னை எழும்பூர்-மங்களூரு(16159)ரயில், சென்னை எழும்பூர்-திருச்சி(12653)ராக்போர்ட் ரயில் ஆகிய ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட கூடிய 3 ரயில்கள் இன்றும், நாளையும் தாம்பரத்திலிருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Egmore ,Tambaram ,Southern Railway ,Chennai Parangimalai ,Katakarai ,Chennai Egmore ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...