×

தஞ்சையில் நவ.4ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னை: தஞ்சையில் நவம்பர் 4ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் நவ.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுகவின் 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தஞ்சையில் நவ.4ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ADAPPADI PALANISAMI ,ADAMUKA PUBLIC MEETING ,THANJA Chennai ,Akkatsi ,General Secretary ,Edappadi ,Adimuga General Meeting ,Tanji ,Thanchi ,Edappadi Palanisami ,
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!