×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி 6ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை

தூத்துக்குடி, நவ. 2: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி, வரும் 6ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளதாக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட எழுத்தாளர், கலைக்குழுவின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், தமிழ் சமூகத்திற்கு அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி, வரும் 4ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது. டிசம்பர் 5ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

மேலும் முத்தமிழ்த்தேர் பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 6ம் தேதி முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி, தூத்துக்குடி வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூபாலராயர்புரம் மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதனை பொதுமக்கள், மாணவ- மாணவியர் பார்வையிட்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி 6ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Muthamither ,Thoothukudi ,Muthamithir ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது