×

அடியாட்களை ஏவி காதலியின் கணவரை தாக்கிய பாஜ பிரமுகர்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியதஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி (47). பாஜ., மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த தமிழரசி(23)யுடன் பழக்கம் ஏற்பட்டது. தமிழரசிக்கு, ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த கணேசன்(32) என்பவருடன் இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, தமிழரசி சிவசக்தியுடன் ஒட்டப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தார். மேலும், கணேசனுடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில், கணேசன் தனது மனைவியை நேரில் சந்தித்து சமாதானம் பேசி அழைத்துச் செல்வதற்காக ஒட்டப்பட்டிக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது, தமிழரசியை குடும்பம் நடத்த வருமாறு கணேசன் அழைத்துள்ளார். இதுதொடர்பாக அங்கிருந்த சிவசக்தியுடன் தகராறு ஏற்பட்டது. உடனே, அவர் 5க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவைத்து, கணேசனை சரமாரியாக அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த கணேசன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிவசக்தியை தேடி வருகின்றனர்.

The post அடியாட்களை ஏவி காதலியின் கணவரை தாக்கிய பாஜ பிரமுகர் appeared first on Dinakaran.

Tags : Baja Pramukh ,Avi Avid ,Nallampalli ,Dharmapuri District Nallampalli Union SubsidedAlli Uradachi Association ,Sivasakthi ,BAJA ,DISTRICT ,Bajaj Pramukh ,Avi ,
× RELATED மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி