×

தேயிலை எஸ்டேட் உரிமையாளர் சர்ப்ரைஸ் 15 தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ‘புல்லட்’: மற்றவர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஆயுதபூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ‘சர்ப்ரைஸ் கிப்ட்’கள் வழங்கி அசத்துவதை உரிமையாளர் சிவக்குமார் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தனது எஸ்ேடடில் 5 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட் பைக்குகளை தீபாவளி போனஸாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். திடீரென அவர்களை அழைத்து உங்களுக்கான தீபாவளி பரிசு என பைக் சாவிகளை ஊழியர்களிடம் வழங்கினார். இதனை எதிர்பார்க்காத ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

உரிமையாளர் சிவக்குமார், ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்து கொண்டு, ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஒரு ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என் பீல்டு க்ளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என் பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமஹா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை புக் ெசய்து வரவழைத்து நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் வாகனத்தின் சாவியைக் கொடுத்திருக்கிறார். இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார்.

The post தேயிலை எஸ்டேட் உரிமையாளர் சர்ப்ரைஸ் 15 தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக ‘புல்லட்’: மற்றவர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் appeared first on Dinakaran.

Tags : Sivakumar ,Lower Kotagiri ,Kotagiri ,Nilgiri district ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்