×

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் அந்த நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் அந்த நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஐந்தாவது யூனிட் பாய்லர் வெடித்த விபத்தில் 15 பேர் பலியான நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். வழக்கில் முன்ஜாமின் கோரி என்.எல்.சி. அதிகாரிகள் கோதண்டம், முத்துக்கண் உள்ளிட்ட 10 பேர் மனு தாக்கல் செய்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை வேறு அதிகாரிக்கு மாற்றுவது தொடர்பாக டிஜிபிதான் முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் அந்த நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : N. L. C. Munjam ,Chennai ,N. L. C. Mujam ,N. L. C. ,Munjam ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...