×

மதுரையில் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க். கம்யூ. கட்சி அறிவிப்பு..!!

சென்னை: மதுரையில் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் மறுத்து வருகிறார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க். கம்யூ. கட்சி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mark ,Madura ,Cameo. Party ,Chennai ,Marxist Communist Party ,Madurai ,Dinakaran ,
× RELATED பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல்...