×

மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு; மீனவர்கள் அதிர்ச்சி

மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அருகே மீன்பிடித்த தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படை சிறைபிடித்தது. மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு நீதிமன்றம் விடுவித்த நிலையில், படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. படகை விடுவிக்கக் கோரி மாலத்தீவில் இருந்து வந்த நிலையில் ரூ.2 கோடி அபராதத்தால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.2 கோடி அபராதம் செலுத்தினால் மட்டுமே படகை விடுவிக்க முடியும் என மாலத்தீவு அரசு நிபந்தனை விதித்துள்ளது. மாலத்தீவு அரசின் நிபந்தனையால் ஊர் திரும்ப முடியாமல் தருவைகுளம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

The post மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு; மீனவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,navy ,Nadu ,Maldivian Navy ,Thoothukudi Daruwaikulam ,Maldives ,Dinakaran ,
× RELATED பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன்...