×

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்காவை வீழ்த்தி ஜெசிகா அரையிறுதிக்கு தகுதி

காங்கூன்: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் மெக்சிகோவின் காங்கூன் நகரில் நடந்து வருகிறது. இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி வருகின்றனர். இன்று காலை நடந்த போட்டியில், பாகலர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான 25 வயதான பெலாரசின் அரினா சபலென்கா, 5வது ரேங்க் அமெரிக்காவின் 29 வயது ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 6-4,6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்றார். முதல் ஆட்டத்தில் ரைபகினாவை வீழ்த்திய இருந்த அவர்இன்று 2வது வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இதே பிரிவில் 4ம் ரேங்க் கஜகஸ்தானின் 24 வயது எலெனா ரைபகினா, 8ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 28 வயது மரியா சக்கரி மோதினர். இதில் ரைபகினா 6-0,6-7,7-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். 2 தோல்வியை சந்தித்த சக்கரி அரையிறுதி வாய்ப்பை இழந்தார். நாளை மறுநாள் இதே பிரிவில் சபலென்கா-ரைபகினா மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்காவை வீழ்த்தி ஜெசிகா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : WTA Finals Series ,Jessica ,Sabalenka ,Cancun ,WTA Finals tennis ,Cancun, Mexico ,Dinakaran ,
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி