×

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுச்சூழல்துறை அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Tamil Nadu ,Environment ,Chennai ,Environment Department ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்