×

பூப்பந்து அணிக்கு தேர்வான பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

 

திருப்பூர், நவ.1: திருப்பூர் மாவட்ட பூப்பந்து கழகம் சார்பில், மாவட்ட பூப்பந்து அணிக்கான தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீகாந்த், கமலேஷ், லோகேஷ், திவ்ய பிரகாஷ் ஆகியோர் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எக்சல் இன்ஜினியரிங் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சுகதேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

The post பூப்பந்து அணிக்கு தேர்வான பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur District Badminton Association ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்