×

தமிழ்நாட்டில் தொன்மையான 195 கோயில்களில் திருப்பணிகள்: மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை : தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையிலான திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விநாயகர் கோயில், குறிஞ்சிப்பாடி திருமூலநாதர் மற்றும் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அய்யனார் கோயில், குடவாசல் எமதண்டீஸ்வரர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கன்னிமூல பிள்ளையார் கோயில், சேரன்மகாதேவி, அபிராமி அம்பாள் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் மகாதேவர் கோயில், கிள்ளியூர், கரியமாணிக்கத்தாழ்வார் கோயில், திருச்சி மாவட்டம், மணப்பாறை எல்லையம்மன் கோயில், இலால்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் நாச்சியார் அம்மன் கோயில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் திரவுபதியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூர் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், திண்டிவனம் வரதராஜப்பெருமாள் கோயில், சென்னை, ஓட்டேரி சுந்தரவிநாயகர் கோயில், கிண்டி வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட 195 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாட்டில் தொன்மையான 195 கோயில்களில் திருப்பணிகள்: மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : 195 Ancient Temples ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...