×

கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பைகர்நாடக அரசு மதிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நவம்பர் மாதத்தில், தமிழகத்துக்கு தரவேண்டிய நீரின் அளவு 16.44 டிஎம்சி ஆகும். இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் இவ்வளவு முரண்டுபிடித்தது இல்லை. . இந்நாட்டின் உச்ச நீதிமன்றம் விதித்த விதியின்படி தான் நாட்டில் உள்ள மக்கள் நடக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு விதியை பின்பற்ற மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. பிடிமானமின்றி பிடிக்கொடுக்காமல் பேசுகின்றனர். . கிட்டத்தட்ட 10 முதலமைச்சர்களையும், நீர்வளத்துறை அமைச்சர்களையும் பார்த்துள்ளேன். இதில் என்ன விஷயம் என்றால், கர்நாடக முதல்வர் சித்தராமையா நமது முதல்வருக்கும் எனக்கும் வேண்டியவர். இப்போது உள்ள நீர்பாசனத்துறை அமைச்சரும் எனக்கு நன்றாக தெரிந்தவர் தான். ஆனால் இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பிலிகுண்டுலுவில் எவ்வளவு நீர் வருகிறதோ அதைதான் கணக்கிட முடியும். 3ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் நிச்சயம் வலியுறுத்தப்படும். அங்கேயும் நீதி கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை குழுவினர் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று சொல்வதை விட சற்று மெத்தனமாக இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பைகர்நாடக அரசு மதிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Supreme Court ,Minister ,Duraimurugan ,Chennai ,Resources ,Tamil Nadu ,Karnataka government ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை...