×

ரூ.7 கோடி மதிப்பு பூங்கா மாயம் தேடும் அதிகாரிகள்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பூங்காவை காணவில்லை எனவும், அதை உடனடியாக கண்டறிய வேண்டும் எனவும் நகராட்சி திமுக கவுன்சிலர் துரைசீனிவாசன் கடந்த நகர மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி தலைவர் லட்சுமி பாரி தலைமையில் ஆணையாளர் ரகுராமன், நகர அமைப்பு ஆய்வர் அல்லிமுத்து, கவுன்சிலர் சிட்டிபாபு மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று பழனிப்பேட்டை பகுதியில் பூங்காவை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகர வரைபடத்தை வைத்துக்கொண்டு அதிகாரிகள் பூங்கா எங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

The post ரூ.7 கோடி மதிப்பு பூங்கா மாயம் தேடும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Palanipet ,Arakkonam, Ranipet district ,
× RELATED அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க....