×

மாநில உரிமையியல் நீதிபதி பதவி மெயின் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பு 1.6.2023ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாநில உரிமையியல் நீதிபதி பதவி மெயின் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Exam Control Officer ,Ajay Yadav ,Tamil Nadu ,State Judiciary ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்