×

போலி ஜிபே வாடிக்கையாளர் மையம் மூலம் மோசடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய குற்றவாளி கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலி ஜிபே வாடிக்கையாளர் மையம் அமைத்து செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஜார்க்கண்ட் மாநிலத்தில்கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 6ம் தேதி தனது மகளுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்ப முயன்றார். ஆனால் அவரது மகளின் வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் கேன்சல் ஆகியுள்ளது. உடனே அவர், கூகுள் வலைத்தளத்தில் ஜி பே வாடிக்கையாளர் சேவை மையம் எண்ணை தேடி அதற்கு போன் செய்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது எதிர் திசையில் பேசிய நபர், வங்கி கணக்கு விவரங்களை கேட்டு வாங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 88,682 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமு, உடனே அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்திய போது, குற்றவாளிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் மாநிலம் சென்று மோசடி செய்த முகமது பெலால் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 1 ஸ்மார்ட் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, முகமது பெலால் தனது நண்பர்கள் 2 பேருடன் ேசர்ந்து போலியான ஜி பே வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கி அதன் மூலம் சந்தேகம் கேட்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று நாடு முழுவதும் பல லட்சம் பணத்தை மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

The post போலி ஜிபே வாடிக்கையாளர் மையம் மூலம் மோசடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய குற்றவாளி கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,ZPay ,CHENNAI ,Ramu ,ZPay Customer Center ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...