×

தீயில் எரிந்து கூடாரங்கள் சேதம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள காரம்பேடு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பேப்பர் அட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் பின்புறம் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக பேப்பர் அட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் உள்ளன. இந்த கூடாரப் பகுதியில் நேற்று நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அட்டை கூடாரங்கள் மற்றும் தொழிலாளர்களின் பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

The post தீயில் எரிந்து கூடாரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Karambedu ,Ekvarpalayam Panchayat ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...