×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போராடி வென்றார் இகா

காங்கூன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் லீக் ஆட்டத்தில், செக் குடியரசின் மார்கெட்டா வோன்ருசோவாவுடன் மோதிய போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் போராடி வென்றார். உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடரின் செடுமல் பிரிவில் ஸ்வியாடெக் (22 வயது, 2வது ரேங்க்) – வோண்ட்ருசோவா (24 வயது, 6வது ரேங்க்) மோதினர். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட முதல் செட்டை ஸ்வியாடெக் 7-6 (6-3) என்ற கணக்கில் போராடி வென்றார்.

இந்த செட்டில் அவர் 2-5 என பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2வது செட்டில் அதிரடியாக விளையாடி வோண்ட்ருசோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த இகா 6-0 என்ற கணக்கில் மிக எளிதாகக் கைப்பற்றி நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி ஒரு மணி, 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் கோரி காஃப் (19 வயது, 3வது ரேங்க்) 6-0, 6-1 என நேர் செட்களில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபரை (29 வயது, 7வது ரேங்க்) வீழ்த்தினார்.

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போராடி வென்றார் இகா appeared first on Dinakaran.

Tags : Iga ,WTA Finals Tennis ,Kangon ,WTA Finals tennis series ,Poland ,Czech ,Republic ,Marketa Vonrusova ,Dinakaran ,
× RELATED இகா ஸ்வியாடெக் தொடர்ந்து நம்பர் 1: மகளிர் ஒற்றையர் தரவரிசை