புனே: உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா மோதும் 32வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவும், 3வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் அரையிறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இன்றைய வெற்றி அதை உறுதி செய்யும் என்பதால், இரு அணிகளும் பெரும் எதிர்பார்ப்புடன் மோதவுள்ளன. தொடர்ச்சியாக 4 வெற்றிகளை வசப்படுத்தி அதிரடி காட்டிய நியூசி. அணி, 5வது ஆட்டத்தில் இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.
எஞ்சிய 3 லீக் ஆட்டங்களில் வெற்றி அவசியம் என்ற நிலையில் நியூசி. உள்ளது. அதே சமயம் 6 போட்டியில் 5 வெற்றி கண்டுள்ள தென் ஆப்ரிக்கா, மொத்த ரன்ரேட்டில் முன்னிலை வகிப்பது அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. நெதர்லாந்திடம் அடைந்த அதிர்ச்சி தோல்வி மட்டுமே தென் ஆப்ரிக்காவுக்கு சற்று பின்னடைவை கொடுத்தது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் வலுவான நியூசி.,
இந்தியாவை சந்திக்க வேண்டி உள்ளது. அதிலும் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை பரிசளித்த ஆப்கானிஸ்தானுடன் என்பதால், தென் ஆப்ரிக்கா மிகவும் கவனமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரையிறுதியை நெருங்க இரு அணிகளுமே முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கும்.
* இரு அணிகளும் 71 முறை மோதியுள்ளதில் தென் ஆப்ரிக்கா 41-25 என முன்னிலை வகிக்கிறது (5 ஆட்டம் ரத்து).
* பொதுவான நாட்டில் நடந்த 20 ஆட்டங்களிலும் தென் ஆப்ரிக்கா கையே ஓங்கியுள்ளது (12-8).
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் நியூசி. 3-2 என முன்னிலை பெற்றுள்ளது.
* உலக கோப்பையில் 8 முறை மோதியுள்ளதில் 6-2 என நியூசி. ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* புனேவில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. ஒரு முறை விளையாடியுள்ள நியூசி (2017), 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.
* தென் ஆப்ரிக்கா முதல் முறையாக புனேவில் களமிறங்குகிறது.
* இங்கு முதலில் பேட் செய்த அணி 4லும், சேஸ் செய்த அணி 5லும் வென்றுள்ளன.
* நடப்பு தொடரில் நடந்த 2 ஆட்டங்களிலும் சேஸ் செய்த இந்தியா, ஆப்கானிஸ்தான் முறையே வங்கதேசம், இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளன.
* நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), லாதம் (துணை கேப்டன்), போல்ட், சாப்மேன், கான்வே, பெர்குசன், ஹென்றி, டேரில், நீஷம், பிலிப்ஸ், ரச்சின், சான்ட்னர், சோதி, சவுத்தீ, வில் யங்.
* தென் ஆப்ரிக்கா: பவுமா (கேப்டன்), கோட்ஸீ, டி காக், ஹெண்ட்ரிக்ஸ், யான்சென், கிளாஸன், மகராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், என்ஜிடி, பெலுக்வாயோ, ரபாடா, ஷம்சி, வாண்டெர் டுஸன், லிஸாட் வில்லியம்ஸ்.
The post நியூசி. – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.