×

ஈ.பி. பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கை தேவை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ஈ.பி. பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கை தேவை என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மின் இணைப்பு துண்டிப்பு குறுஞ்செய்தியை பார்த்தவுடன் பதட்டம் அடைய வேண்டாம் என்று டான்ஜெட்கோ அறிவுறுத்தியுள்ளது. குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் டான்ஜெட்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய லிங்கை கிளிக் செய்யாமல், உடனடியாக 1930இல் புகார் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

The post ஈ.பி. பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கை தேவை: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED படிப்படியாக குறையும் ஒன்றிய அரசின்...